இன்றைய வேத வசனம் 15.10.2021

#Bible #Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 15.10.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

இன்ப, துன்ப நேரங்களில் 'ஆண்டவரே' என்று நமது அருமை இரட்சகரே அழைக்கும் போது, அவர் உங்களை இரட்சிக்கிறார், பெலப்படுத்துகிறார். வேதத்தில் முக்கியமாக நான்குபேர் அவரை அழைத்ததை இன்று தியானிப்போம்.

1, ஆண்டவரே, என்னை இரட்சியும். (மத்தேயு 14:30)

பேதுரு கடலில் அமிழ்ந்து போகையில் கர்த்தரை நோக்கி கதறிய வார்த்தைகள் இவைகள். இயேசு ஒருவரே இரட்சகர்! அவர் ஒருவரே மீட்டெடுக்கிறவர்! அவர் ஒருவரே இரட்சிப்பின் கிரயம் செலுத்தியிருக்கிறவர். நீங்களும் 'ஆண்டவரே' என்று அவரை அழைப்பீர்களா?

2, ஆண்டவரே, என்னை பெலப்படுத்தும். (நியாயாதிபதி 16:28)

நிந்தைகள், அவமானங்கள், மத்தியிலே சிம்சோன் தேவ பெலத்திற்காய் கதறிய வார்த்தைகள் இவைகள்! நீங்களும் ஒரு ஜெயமான கிறிஸ்தவ வாழ்க்கை நடத்த வேண்டுமானால், உங்களுக்கும் தேவபலன் மிக அவசியம்!

3, ஆண்டவரே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்;  (சங்கீதம் 119:23)

பரிசுத்த ஜீவியத்தில் முன்னேற, ஆவியானவரின் வெளிச்சத்தில் உங்கள் ஜீவியத்தை ஆராய்ந்து பார்ப்பது அவசியம். தாவீதின் வார்த்தைகள் இவை வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும் என்று ஜெபிப்பீர்களா?

4, ஆண்டவரே என்னை அனுப்பும்; (ஏசாயா 6:8)

யாரை நான் அனுப்புவேன்; என்ற ஆண்டவரின் அங்கலாய்ப்பைக் கேட்டு, தன்னை ஒப்புக்கொடுத்து, ஏசாயா கதறிய வார்த்தைகள் இவைகள். அறுவடையோ மிகுதி, ஆட்கள் இல்லை, நீங்கள் எப்படி? இன்றே தேவ பாதப்படியில் உங்களை அர்ப்பணித்து, தியாகத்துடன் காடு மேடாய் அலைந்து சுவிஷேசத்தை  அறிவிப்பீர்களா?

எரேமியா 33:3
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!