இன்றைய வேத வசனம் 16.10.2021

#Prayer #Bible
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 16.10.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

கிறிஸ்து இயேசுவிடம் தவறாமல் ஜெபம் செய்கிறீர்களே இதனால் உங்களுக்கு என்ன கிடைத்தது? என்று ஒரு ஊழியரிடம் கேட்டார் ஒரு அவிசுவாசி.

அதற்கு ஊழியர் சொன்னார்:

பொதுவாக நான் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை, மாறாக அனேக காரியங்களை இழந்திருக்கிறேன் என்றார்.

எவற்றையெல்லாம் இழந்தீர்கள்? என்று அந்த அவிசுவாசி மீண்டும் கேட்க, அந்த ஊழியர் சொன்னார்.
நான் என் பெருமையை இழந்தேன். 

நான் என் ஆணவத்தை இழந்தேன். 
பேராசையை இழந்தேன். 
நான் என் போதைப் பழக்கத்தை இழந்தேன்.
நான் என் கோபத்தை இழந்தேன். 
நான் இச்சையை இழந்தேன். 
பொய் சொல்லி மகிழ்வதை இழந்தேன்.
நான் பாவத்தின் சுமையை இழந்தேன்.

நான் பொறுமையின்மை, விரக்தி மற்றும் மனச்சோர்வை இழந்தேன். என்று பதிலளித்தார்.

நாம் எதையாவது பெற அல்ல, ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர தடையாய் இருக்கிற விஷயங்களை அழிக்க ஜெபம் செய்ய வேண்டும்:

அப்படி ஜெபிக்கும் பொழுது, தேவையில்லாத கறைகளை நீக்கி நம்மை பரிசுத்தப்படுத்தி அவர் அண்டையில் அணைத்துக் கொள்வார்.

பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம். (கொரிந்தியர் 7:1)

ஆமென்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!