சேவை காலம் நிறைவடைந்து நாடு திரும்பும் இலங்கைக்கான செக் குடியரசு மற்றும் எகிப்து தூதுவர்கள்

Prabha Praneetha
2 years ago
சேவை காலம் நிறைவடைந்து நாடு திரும்பும் இலங்கைக்கான செக் குடியரசு மற்றும் எகிப்து தூதுவர்கள்

தமது சேவை காலம் நிறைவடைந்து நாடு திரும்பும் இலங்கைக்கான செக் குடியரசு மற்றும் எகிப்து தூதுவர்கள் நேற்று (15) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தனர்.

செக் குடியரசின் தூதுவர் மிலான் ஹொவர்க் மற்றும் எகிப்பு தூதுவர் ஹுசேன் எல் சஹர்தி ஆகியோர் பிரதமரை சந்தித்து தமது சேவை காலம் எதிர்வரும் வாரத்துடன் நிறைவு பெறுவதாக நினைவூட்டினர்.

தனது சேவை காலத்தின்போது வழங்கப்பட்ட சகல ஒத்துழைப்புகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக செக் குடியரசின் தூதுவர் மிலான் ஹொவர்க் இதன்போது குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த எகிப்து தூதுவர் ஹூசேன் எல் சஹர்தி அவர்கள் விருந்தோம்பல் மற்றும் காட்டிய கருணைக்கு மிகுந்த நன்றி என குறிப்பிட்டார்.

அத்துடன் தமது சேவை காலத்தின்போது நிறைவேற்ற பணிகள் தொடர்பிலும் தூதுவர்கள் இதன்போது பிரதமருக்கு விளக்கமளித்தனர்.

நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டுவரும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மற்றும் முறையாகவும் பாதுகாப்பாகவும் நாட்டை திறப்பது தொடர்பில் இராஜதந்திரிகள் இருவரும் அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.

தமது நாட்டு மக்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு பெரும் எதிர்பார்ப்புடன் காணப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

முறையான சுகாதார வழிகாட்டல்களுடன் இதுபோன்று நாட்டை திறப்பதன் ஊடாக இலங்கைக்கு வருகைத்தர எதிர்பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்படும் என்றும் குறிப்பிட்டனர்.

குறித்த சந்திப்பின்போது மக்களிடையேயான பரஸ்பர உறவை உறுதிசெய்தல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு கலாசார உறவு, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆய்வு பரிமாற்ற வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!