அதிக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

Prabha Praneetha
2 years ago
அதிக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

அதிவேக நெடுஞ்சாலைகளில் அலுவலக நேரங்களில் வெளியேறும் வாயில்களுக்கு அருகில் காணப்படும் அதிக போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புதிய மின்னணு கட்டண அறிவீட்டு கூடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன்பெர்ணான்டோ தெரிவித்தார்.

நெடுஞ்சாலை வெளியேறும் வாயிலில் உள்ள கட்டண கூடங்களில் கைகளினால் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் போது காசாளர் டிக்கெட்டை ஒப்படைக்க சுமார் 12-15 வினாடிகள் செல்கிறது.

இலத்திரணியல் கட்டண முறையைப் பயன்படுத்தும் போது 6 வினாடிகளில் அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து வாகனங்களுக்கு வெளியேற முடியும்.

எனவே நெடுஞ்சாலை பயனாளர்கள் முற்கொடுப்பனவு அட்டை முறையைப் பயன்படுத்துமாறு அமைச்சர் கோரினார்.

இந்த அட்டையை அறிமுகப்படுத்துவதன் மூலம் நெடுஞ்சாலைகளின் வெளியேறும் வாயில்களில் ஏற்படும் அதிக போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.

கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் மாத்திரம் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள இந்த மின்னணு கட்டண அறவீட்டு நிலையங்களை கெரவலப்பிட்டி உள்ளக பரிமாற்ற நிலையம் மற்றும் ஏனைய நெடுஞ்சாலைகள் என்பவற்றிலும் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!