அரசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்!

Prabha Praneetha
2 years ago
அரசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்!

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் அனைத்து ரக அரசியின் விற்பனை விலைகளும் 25 ரூபா தொடக்கம் 50 வரை அதிகரிக்க கூடும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சுராஜ் ஜயவிக்ரம தெரிவித்தார்.

எனவே, அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் விரைவாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதால் எதிர்வரும் தினங்களில் அரசிக்கான கேள்வி அதிகரிக்கும் என்றும் இதனால் அரிசியின் விற்பனை விலையை அதிகரிக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உரப்பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் எதிர்வரும் ஜனவரி மாத்திற்குள் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!