இன்றைய வேத வசனம் 19.10.2021

#Bible #Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 19.10.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். (யோவான் 5:8)
பெதஸ்தா என்பதற்கு "இரக்கத்தின் வீடு" என்று அர்த்தம். இந்த பெதஸ்தா குளத்தண்டை 38 வருடங்களாக, இரக்கம் கிடைக்காமல், வியாதியோடு படுத்திருந்தான், ஒரு வியாதியஸ்தன்.

அவன் வெகுகாலமாய் வியாதியோடிருக்கிறான் என்பதை அங்கு வந்த இயேசு கிறிஸ்து அறிந்து, அவனை சுகமாக்க சித்தங்கொண்டார்.

அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவரல்லவா? அவனைக் கர்த்தர் சுகமாக்க உபயோகித்த வார்த்தை "உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட" என்பதே.

38 வருடமாக தொடர்ந்து படுத்திருந்த படுக்கை, எந்த விதத்தில் இருந்திருக்குமோ?

மிகவும் சொகுசாய் இருந்திருந்தால் தானோ என்னவோ, அவனால் பெதஸ்தா குளத்தில் முதலில் இறங்க முடியாமல் போயிற்று.

வியாதி படுக்கையின் சொகுசுகள் அநேகரை விடுதலை பெற்றுக் கொள்ள முடியாமல் செய்து விடுகின்றன..

"சோம்பேறியே நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்?" என்று வேதம் கேட்கிறது (நீதி 6:9)

படுக்கை உங்களை சுமந்தது போதும். படுக்கைக்கு இனி நீங்கள் அடிமையல்ல, உங்கள் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவுங்கள்.

படுக்கையை அப்படியே விட்டு விட்டு போய்விட்டால், இன்னொருவன் வந்து படுக்கையின்மேல் ஓடி வந்து படுத்துக் கொள்வான். உங்கள் வியாதி படுக்கையை இன்னொருவனுக்கு கொடுத்து அவனை கெடுத்து விடாதீர்கள்!

உங்கள் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவுங்கள். உங்கள் வியாதிகளையும், பலவீனங்களையும், தோல்விகளையும் சொல்லி சொல்லி மற்றவர்களை பெலவீனப்படுத்தாதீர்கள்.
உங்கள் படுக்கையை எடுத்துக் கொண்டு நடையைக் கட்டுங்கள்!

 ஆமென்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!