இன்றைய வேத வசனம் 20.10.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
எழுப்புதல் எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா? உங்கள் உள்ளங்களில் தான். கர்த்தருக்கு கீழ்ப்படிய உங்களை பரிபூரணமாக ஒப்புக்கொடுக்கும் போது, கர்த்தர் உங்களை வல்லமையாக பயன்படுத்துவார்.
சார்லஸ் பின்னிக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அந்தப் பெண்ணை முதன் முதலில் பார்க்க தன் குதிரையில் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் குதிரைக்கு லாடம் கட்ட இறங்கினார்.
லாடம் கட்டுபவன் கட்டி முடிப்பதற்குள் நாம் அருகிலுள்ள ஆலய ஆராதனையில் பங்கு பெறலாமே என்ற எண்ணத்துடன் உள்ளே சென்றார்.
அங்கு பிரசங்கிக்க இடம் கொடுத்தார்கள். இவர் பிரசங்கத்தை ருசித்த ஜனங்கள் அவரை போக விடவில்லை. ஒரு நாள் - இரண்டு நாள் என்று தொடர்ந்து பிரசங்கித்தார் ஆறு மாதங்கள் தொடர்ந்து எழுப்புதல் தீ பிடித்தது.
அந்தக் கிராமத்தை சுற்றி இருந்த ஜனங்கள் அனைவரும் இரட்சிக்கப்பட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்துக்கொண்டனர்.
பின்பு மணப்பெண்ணுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், திருமணத்தை தள்ளி வைக்கலாம், ஆனால் ஆவியானவர் கிரியை தள்ளிவைக்க முடியாது என்று எழுதி அனுப்பினார்.
சார்லஸ் பின்னியை கர்த்தர் வல்லமையாய் உபயோகப்படுத்த காரணம் என்ன? அவர் உள்ளம் தேவ சித்தத்தின மேலேயே இருந்தது. தேவ சித்தத்தை அறிந்துகொள்கிரவராகவும், உடனே கீழ்ப்படிகிறவராகவும் இருந்தார்.
நம் தேசத்திற்கு இன்று எழுப்பதல் தேவை. சுயநலங்களை உதறிவிட்டு, கர்த்தருக்கு முற்றிலும் கீழ்ப்படிய உங்களை அற்பணியுங்கள்.
நீ கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரம். கர்த்தருக்காக ஒளிவீச இன்றே எழும்பிடு.
உபாகமம் 13:4
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.
ஆமென்