நான்கு நாட்களாக கொழும்பு மாநகரில் கொரோனா மரணம் பதிவாகவில்லை!

Reha
4 years ago
நான்கு நாட்களாக கொழும்பு மாநகரில் கொரோனா மரணம் பதிவாகவில்லை!

கொழும்பு மாநகரில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் கொரோனாவால் எவரும் உயிரிழக்கவில்லை.

இந்தத் தகவலை கொழும்பு மாநகர தலைமை மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கொழும்பில் ஐந்து நோயாளிகளே நாளாந்தம் அடையாளம்காணப்பட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக எவரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் நாங்கள் 220 பி.சி.ஆர். சோதனைகளையும், 300 துரித அன்டிஜன் சோதனைகளையும் முன்னெடுக்கின்றோம். இவற்றில் இரண்டு வீதத்துக்கும் குறைவானவர்களே நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

புதிதாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுமக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வதால் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கலாம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4