புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் கோட்டாவிடம் விரைவில் கையளிப்பு!

Prabha Praneetha
4 years ago
புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் கோட்டாவிடம் விரைவில் கையளிப்பு!

புதிய அரசமைப்புக்கான வரைவு நகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விரைவில் கையளிக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

"புதிய அரசமைப்பை இயற்றும் பணி தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவானது, புதிய அரசமைப்புக்கான வரைவு நகலை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.

அதன்பின்னர் பல்லினத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய புதிய அரசமைப்பை இயற்றுவதற்கான வாய்ப்பு எமக்கு உருவாகும்.

அதேநேரத்தில்  நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றும் உள்ளது. சகல தரப்பினரினதும் கருத்துகளை உள்வாங்கிய பின்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரச தலைமை முடிவெடுக்கும்" - என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4