ஒரு குடும்பத்தை மருத்துவமனைக்கு அனுப்பிய பயங்கர விபத்து

#Accident #Police
Prathees
4 years ago
ஒரு குடும்பத்தை மருத்துவமனைக்கு அனுப்பிய பயங்கர விபத்து

இரத்தினபுரி, சன்னஸ்கம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (19) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

பெல்மடுல்லவிலிருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று காரை முந்திச் செல்ல முற்பட்டபோது இரத்தினபுரியில் இருந்து பெல்மடுல்ல நோக்கிச் சென்ற கப்ரக வண்டி மீது மோதி உள்ளது.

முச்சக்கர வண்டியில் இருந்த 10 வயது மற்றும் 5 வயது குழந்தைகள் படுகாயங்களுடன் பெல்மடுல்ல மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

முச்சக்கர வண்டியினை ஓட்டிச் சென்ற குழந்தைகளின் தந்தையும் தாயும் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளில் ஒருவரது உடல்நிலை மோசமாக உள்ளதால் கொழும்பு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

முச்சக்கர வண்டியின் சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெல்மடுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4