நாட்டில் மேலும் 442 பேருக்கு கோவிட் தொற்று 

#Covid 19 #Corona Virus
Prathees
4 years ago
நாட்டில் மேலும் 442 பேருக்கு கோவிட் தொற்று 

நாட்டில் மேலும் 442 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, நாட்டில் இதுவரை கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 533,208 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,கோவிட் தொற்றில் இருந்து இன்று மேலும் 360 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 493,674 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,543 ஆக அதிகரித்துள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4