சசிகுமாரின் ‘கொம்பு வச்ச சிங்கம்’ ரிலீஸ் திகதி அறிவிப்பு
Prabha Praneetha
3 years ago
சசிகுமார் நடித்த திரைப்படங்கள் வரிசையாக ரிலீஸாகி கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக உடன்பிறப்பே என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் வரும் தீபாவளி அன்று அவர் நடித்த எம்ஜிஆர் மகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சசிகுமார் நடித்த இன்னொரு திரைப்படமான கொம்பு வச்ச சிங்கம்டா என்ற திரைப்படம் வரும் நவம்பர் 26 ஆம் திகதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் உறுதி அளித்துள்ளனர், சசிகுமார் ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்த இந்த திரைப்படத்தை எஸ்ஆர் பிரபாகரன் என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.