செல்போன் வெடித்ததில் 5 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு..!

Prasu
4 years ago
செல்போன் வெடித்ததில் 5 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு..!

வியட்நாமில் ஆன்லைன் வகுப்பின் போது செல்போன் வெடித்ததால் 5 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா நோய்த்தொற்று கிட்டத்தட்ட அனைவரையும் டிஜிட்டல் சாதனங்களுக்கு மாற கட்டாயப்படுத்தியுள்ளது. அது வியாபாரமாக இருந்தாலும் சரி, கல்வியாக இருந்தாலும் சரி.அதன்படி, பள்ளி மாணவர்களும் தங்கள் மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் போன்றவற்றில் பாடங்களை கற்று வருகின்றனர்.இருப்பினும், நீண்ட நேரம் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து மாணவர்களுக்கு அபாயத்தை அதிகரித்துள்ளது மற்றும் அது அவர்களின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

இந்த நிலையில்,வியட்நாமின் மாகாணமான என்ஹே ஆன்(Nghe An) பகுதியில் வசிக்கும் 5 ஆம் வகுப்பு மாணவன் ஆன்லைன் வகுப்பில் ஈடுபட்டிருந்தபோது செல்போன் வெடித்ததால் தீக்காயங்களுடன் உயிரிழந்துள்ளார்.ஆன்லைன் வகுப்பின் போது செல்போனை சார்ஜ் போட்டுக்கொண்டேஆன்லைன் வகுப்பில் ஈடுபட்டதால்,பேட்டரி அதிக வெப்பமடைந்து வெடித்ததில், கடுமையான தீக்காயங்களுடன்,11 வயது அக்குழந்தையை அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,ஆனால்,அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மொபைல் வெடித்தபின் குழந்தையின் உடைகள் தீப்பிடித்து எரிந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும்,அம்மாணவர் ஹெட்போனை அணிந்து படித்துக் கொண்டிருந்தபோது,செல்போன் வெடித்ததாக விஎன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

வியட்நாமின் நம் டென் மாவட்ட கல்வித் துறையின்(Nam Den district Department of Education) தகவல்படி,கடந்த மாதம் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன, ஆனால் திடீரென மூடப்பட்டால் தயாராக இருக்க, வாரத்திற்கு ஒரு முறை ஆன்லைன் வகுப்புகளுக்கு வருமாறு அதிகாரிகள் மாணவர்களை கேட்டுக்கொண்டனர்.இந்த நிலையில்,அக்டோபர் 14 அன்று மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கல்வி கற்கும் இவ்வேளையில்,இதுபோன்ற சம்பவங்கள் சமீபத்தில் பல நாடுகளில் அதிகரிப்பதால் பெற்றோர்களிடையே அச்சத்தை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4