இலவச கணனி கல்வி கற்பித்து அபார சாதனை

Ravi
2 years ago
இலவச கணனி கல்வி கற்பித்து அபார சாதனை

கண்டியைச் சேர்ந்த சபெஷ்குமார் என்பவர் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்கிறார். இவர் zoom மூலம் இலவச கணணி கல்வியை கற்பிக்க‌ ஆரம்பித்ததும் 500க்கும் மேற்பட்டோர் கல்வியில் இணைந்து கொண்டனர்.  

இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவானோர் சிறியோர் முதல் பெரியோர் வரை மிகவும் சிறப்பான தமிழில் புரியக் கூடிய வகையில் இந்த M S WORD  ஜ  தற்போது கற்றுக் கொண்டு வருகின்றனர். இவர்களை 4 குழுக்களாக பிரித்து திங்கள் வியாழன் 18.30க்கும்  சனி ஞாயிறு 15.30 க்கும் பயிற்சிகளை நடாத்தி வருகின்றார்.

இவருடைய இந்த இலவச கல்வி சேவையை பாராட்டி மனிதவலு வேலைவாய்ப்புத் அமைச்சு சிறப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. அத்துடன் மத்திய மாகாண கல்வித் திணைக்கள தொழில்நுட்பத்துறையில் சான்றிதழ் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் இணைந்து தொடர்ந்து எதிர்வரும் முதலாம் திகதி முதல் MS Excel பாடம் கற்பிக்க தொடங்குகின்றனர். இதில் இணைய விரும்புவோர் பின்வரும் whatsapp  ல் இணைந்து பின்னர் குழுக்களாக பிரிந்து இலவச கணணிக் கல்வியை கற்று வரலாம்.

https://chat.whatsapp.com/DhoZkA1UOZRJUGc4FT6Tu9 

 

தகவல் - சபெஷ்குமார்

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!