சீனியின் விலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள மாற்றம்

Prabha Praneetha
2 years ago
சீனியின் விலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள மாற்றம்

சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை உடனடியாக நீக்குமாறு நாட்டில் முன்னிலையிலுள்ள 10 சீனி இறக்குமதியாளர்கள் நீதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சீனி இறக்குமதியாளர்கள் விளக்கமளித்து கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனியின் நிர்ணய விலையை  25 ரூபாவால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 160 ரூபா முதல் 190 ரூபா வரையில் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 122 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் சிவப்பு சீனி 125 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில்,வர்த்தகர்கள் அதிக விலைகளுக்கு சீனியினை விற்பனை செய்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!