அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் ரஜினி படம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தையும் டீசர் சமீபத்தில் வெளியாகி மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அண்ணா படத்தில் முதல் சிங்கில் எஸ்.பி.பி குரலில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, அண்மையில் மருதாணி என்று தொடங்கும் இந்த பாடல் ரிலீசாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள அண்ணாத்த படம் அமெரிக்காவில் சுமார் 50 தியேட்டர்களில் பிரீமியர் காட்சியாக நவம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.
அங்கு 300க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.