மின்னல் தாக்கி 12 வயது சிறுமி பரிதாபச் சாவு!

Reha
4 years ago
மின்னல் தாக்கி 12 வயது சிறுமி பரிதாபச் சாவு!

மின்னல் தாக்கி 12 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் குருநாகல் மாவட்டம், மஹவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் பன்வௌ, பலல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் சீரற்ற காலநிலை நிலவி வந்த நிலையில், சிறுமி தனது வீட்டு வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளார்.

எரிகாயங்களுடன் நாகொல்லாகம வைத்தியசாலையில் சேர்க்கப்படும் போது சிறுமி உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்காக நாகொல்லாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4