ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்!

Reha
4 years ago
ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்!

முதல் முறையாக இலங்கை பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பெற்றெடுத்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். 31 வயதான பெண் ஒருவருக்கு இன்று வியாழக்கிழமை காலை ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன.

இவ்வாறு பிறந்த குழந்தைகளில் 3 ஆண் , 3 பெண் குழந்தைகளை, குறித்த தாயார் பெற்று எடுத்துள்ளார். இச்சம்பவம் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் பதிவாகியுள்ளது. தற்போது, தாயும் 6 குழந்தைகளும் நலமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பிறந்த சம்பவம் இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

தாயும், ஆறு குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஒரு குழந்தை மட்டும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4