நண்பரின் வீட்டில் தங்கியிருந்த யுவதி சடலமாக மீட்பு!

Prabha Praneetha
4 years ago
நண்பரின் வீட்டில் தங்கியிருந்த யுவதி சடலமாக மீட்பு!

வீடொன்றிலிருந்து 24 வயது யுவதியின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொடை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தே குறித்த யுவதியின் சடலத்தை பலாங்கொடைப் பொலிஸார் மீட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

முல்பனான, கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக, பலாங்கொடை வைத்தியசாலையின் ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பலாங்கொடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4