நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை: உதய கம்மன்பில

Prathees
2 years ago
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை: உதய கம்மன்பில

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை  இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (21) சில பெற்றோல் நிலையங்களில் எழுந்த நிலைமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே  அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ஒரே விஷயத்தை 108 முறை சொல்லும்போது அது உண்மையாக  மாறும் என்று ஒரு பழைய  நம்பிக்கை உள்ளது. அதனால்தான் பெற்றோலிய தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கடந்த 4 மாதங்களில் எண்ணெய் பற்றாக்குறை இருக்கும் என்று  ஆதாரமற்ற அறிக்கைகளை அவ்வப்போது கூறி வருகின்றனர்.

இவர்கள் குறிப்பிட்டுள்ள எண்ணெய் பற்றாக்குறை கடந்த 4 மாதங்களாக இல்லை.

நாட்டில் எண்ணெய் பற்றாக்குறை இருந்தால் நான் முன்பே சொல்கிறேன் என நான் உறுதியளித்தேன்

செப்டம்பர் 29 அன்று கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என நான் நாட்டுக்குச் சொன்னேன்.

ஆனால் அது பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெயை பாதிக்காத வகையில் அதை அகற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

மீண்டும், நாட்டில் எண்ணெய் பற்றாக்குறை இல்லை. பொய் சொல்வதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!