இன்றைய வேத வசனம் 22.10.2021

#Bible #Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 22.10.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

நாம் வாழும் இந்த உலகம் 25 ஆயிரம் மைல் சுற்றளவு உள்ளது. அதன் எடை 60 கோடியே கோடி டன். இவ்வளவு எடையுள்ள இந்த உலகத்தை வானமண்டலத்திலே, வெறுமையிலே, அந்தகாரத்திலே, கர்த்தர் தொங்க வைத்திருக்கிறார்.

எவ்வளவு பெரிய அற்புதம்! யோபு பக்தன் வியப்போடு நோக்குகிறார். "அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்." (யோபு 26:7)

அதுமட்டுமா? ஒரு நிமிடத்திற்கு 1500 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியைச் சூழல வைக்கிறார். அவ்வளவு வேகமாக சுழலும் பூமியிலுள்ள பொருட்கள் சிதறிப்போவதில்லை. நம்மாலும் அதை உணர்ந்து கொள்ள முடிவதில்லை. அவ்வளவு நேர்த்தியாக, அற்புதமாக சுழல விட்டிருக்கிறார்.

கலிலியோ, காபர்னிக்கஸ் போன்றவர்கள் விவரித்துச் சொல்லும் முன், ஏசாயா தீர்க்கதரிசி பூமி உருண்டையானது என்றும், அதை தேவன் நடத்துகிறார் என்றும் உலகத்திற்கு அறிவித்தார்.
அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; (ஏசாயா 40:22)

இவ்வளவு வல்லமையும், அற்புதமுமான தேவனை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா? அவர் உங்கள் உள்ளத்தில் வீற்றிருக்கிறாரா??

இல்லையென்றால், இன்றே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்!

சங்கீதம் 19:1
வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.

ஆமென்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!