பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்க ஏன் அஞ்சுகின்றீர்? - அரசிடம் மாணவர் ஒன்றியம் கேள்வி

Prasu
2 years ago
பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்க ஏன் அஞ்சுகின்றீர்? - அரசிடம் மாணவர் ஒன்றியம் கேள்வி

"ஆரம்பப் பிரிவு மாணவர்களுடைய கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைளை ஆரம்பிக்க முடியும் என்றால் ஏன் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க முடியாது? ஏன் அரசு அச்சமடைகின்றது?"

- இவ்வாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தல்லவ ஸ்ரீதன்ன தேரர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கேள்விகளை  எழுப்பியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"கல்வித்துறையின் கட்டமைப்பு ஸ்தம்பிதம் அடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ளன.

ஒருபுறம் பல்கலைக்கழக கட்டமைப்பும் மறுபுறம் பாடசாலைக் கட்டமைப்பும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

ஆனால், இந்தக் காலப்பகுதிக்குள் பாடசாலையையோ அல்லது பல்கலைக்கழகத்தையோ ஆரம்பித்தல் தொடர்பான எந்தச் செயற்றிட்டங்களும் அரசிடம் இருக்கவில்லை.

தற்போதைய நிலைப்பாட்டினுள் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தல் தொடர்பான ஆலோசனைகளை நாமும் அரசிடம் முன்வைத்திருந்தோம். ஆனால், அது தொடர்பில் அரசு எந்தக்  கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை.

மாறாக அவர்கள் நிகழ்நிலை கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைளை மாத்திரமே முன்னெடுப்பதற்கான யோனையை முன்வைத்தனர்.

ஆரம்பப் பிரிவு மாணவர்களுடைய கற்றல்  கற்பித்தல் நடவடிக்கைளை ஆரம்பிக்க முடியும் என்றால் ஏன் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க முடியாது?  ஏன் அரசு அச்சமடைகின்றது?" - என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!