இன்றைய வேத வசனம் 25-10-2021
உமது கோலும் தடியும் என்னைத் தேற்றும். (சங்கீதம் 23;4)
அன்புக்கினிய கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதரர்களே
தாவீது சொன்ன இந்தக் கோலும் தடியும் எதைக் குறிக்கின்றது.
அதாவது கோலுக்கும் தடிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்று பார்த்தால் கோல் என்பது மிகவும் பருமனாகவும் நீளமாகவும் அதாவது ஒரு சண்டைக்கு பயன்படக்கூடியது போனறு தோன்றும்.
அது ஒரு ஆடு மேய்ப்பவன் கையில் வைத்திருப்பார். அது அந்த ஆடுகளின் பாதுகாப்புக்காக ஏனைய மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக அந்த மேய்ப்பன் வைத்திருப்பான்.
அதேவேளை அந்தக் கோலின் சத்தத்திற்கு அடிபணிந்து ஆடுகளும் அந்த கோவிலின் பின்னே அவன் பாதையில் செல்லும்.
அதேபோல் தடியானது இங்கு தடி என்பது பிரம்புவாக காணப்படுகிறது.
ஒரு ஆசிரியரின் கையில் இருக்கும். ஒரு தந்தையின் கையிலும் பிரம்பு இருக்கும்.
பிரம்பை கையாலாதவன் தன் மகனை சிஹ்டிக்கிறான்
என்று நீதிமொழிகள் சாலமோன் பல தடவை பிரம்பைப் பற்றி கூறியிருந்தார்.
ஆக பிரம்பு ஆனது ஒரு நெறிப்படுத்தலை குறிக்கின்றது.
ஆசிரியர் பாடத்தை சுட்டிக்காட்ட பிரம்பு உதவுகின்றது. பிரம்பு ஆனது ஒரு நெறிப்படுத்தலை செய்யவும் ஞானத்தை போதிக்கவும் இங்கே குறிப்பிடப் படுகின்றது.
எனவே கோலானது பாதுகாப்பையும், எமக்கான சரியான பாதையையும் குறிப்பிடுகின்றது.
தடியானது நெறிப்படுத்தலையும், ஞானத்தை போதிப்பதும் ஆகிறது.
ஆமென்
ஓசன்னா ரவி
NLM Church
luzern
swiss