இன்றைய வேதவசனம் 27-10-2021
சூரியனுக்கு கீழே நான் பட்ட எல்லா பிரயாசத்தின் மேலுள்ள ஆசையை விட்டுவிட வகை பார்த்தேன் (பிரசங்கி 2 20)
ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால் அந்த ஐநூறு உனக்கு பணமாக தெரியாது.
இருநூறு என்று எதிர்பார்த்து ஐநூறு கிடைத்தால் நிம்மதி வந்து விடுகிறது. எதிர்பார்ப்பை குறைத்து கொள்வது மனதை நிறைய வைக்கின்றது.
என்பதே கிறிஸ்தவத்தின் தத்துவம்
லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களை பெற்றவன் மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது என்றால் ஓடுகிறான்.
ஏன்?
அது ஆசை போட்ட சாலை
அவன் பயணம் அவன் கையிலில்லை ஆசையின் கையிலிருக்கிறது/
போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான். அப்போது அவனுக்கு ஆண்டவரின் ஞாபகம் வருகின்றது.
அனுபவங்கள் இல்லாமல் அறிவின் மூலமே தெய்வத்தைக் கண்டு கொள்ளும்படி போதிப்பது தான் கிறிஸ்தவம்.
பொறாமை, கோபம் எல்லாமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான்.
வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி உனது பயணத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை வேத வசனங்கள் மேற்கொள்ளுகின்றன.
கிறிஸ்தவம் என்றுமே அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி
வாழ்க்கையின் நீதியை நீதிமொழிகள் போதிக்கின்றது.
அந்த நீதிகள் உன்னை வாழ வைப்பதற்காகவே போதிக்கின்றன