இன்றைய வேத வசனம் 28.10.2021

#Bible
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 28.10.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாய் வாழ்ந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் வார்க்கப்படாமலும், அதின் வண்டல்களின் மேல் அசையாமலும் இருந்தது; (ஏரேமியா 48:11)

திராட்சரசத்தைப் பிழிந்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கிறார்கள். சில நாட்களில் ரசத்திலுள்ள அசுத்தங்களும், வண்டல்களும் அதன் அடியில் படிகின்றன. அதை அப்படியே வைத்து விட்டால் அந்த வண்டல்களும், அசுத்தங்களும் சேர்ந்து திராட்சரசத்தைக் கெட்டுப் போகப் பண்ணும்.

எனவே, அதை ஒரு பாத்திரத்திலிருந்து அடுத்த பாத்திரத்திற்கு வார்ப்பார்கள். இப்படி பல பாத்திரங்களுக்கும் மாற்றப்பட்ட பின் தான், திராட்சரசம் தூய்மையுள்ளதாக சிறந்து விளங்கும்.
இரட்சிக்கப்பட்ட உங்களில் கூட, சில பழைய ஆதாமின் தன்மைகளும், கேடானவைகளும், அருவருப்பும்கூட இருக்கலாம். உங்களுக்குள்ளே பாவப் பிரமாணமும் கிரியை செய்து கொண்டே வரக்கூடும்.

ஆகவே, நீங்கள் உங்களுடைய இரட்சிப்பின் அனுபவத்திலேயே நின்றுவிடாமல் பரிசுத்த ஆவியின் அபிஷேகம், தேவ பிள்ளைகள் ஐக்கியம், சுத்திகரித்தல் என்று பரிசுத்தமாகுதலை நோக்கி, ஒரு பாத்திரலிருந்து மறுபாத்திரத்திற்கு வார்க்கப்பட்டு, முன்னேறிக் கொண்டே செல்ல வேண்டும்.

இப்போது நீங்கள் மண்பாண்டமாகிய சரீரத்தில் வாழ்கிறீர்கள். ஒருநாள் இந்த மண்பாண்டத்திலிருந்து, உங்கள் ஜீவன் மகிமையின் பாத்திரத்திற்குள் பிரவேசிக்க வேண்டும். அந்த நாளில் கிறிஸ்துவின் சாயலை அணிந்துகொள்ள, இப்பொழுதே உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வீர்களாக.

(தீமோத்தேயு 4:6-7)

6. ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும்காலம் வந்தது.
7. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.

ஆமென்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!