இன்றைய வேத வசனம் 29.10.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
கண்ணாடி மாளிகையில் வாழுகிறவன், கல் எறியக்கூடாது" என்பது பழமொழி. வேதப் புத்தகத்தில் கல்லெறிதலைப் பற்றி அநேக இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
விபச்சாரத்திலும், விக்கிரக ஆராதனையிலும் வாழ்பவனை கல் எறிந்து கொல்ல வேண்டும். (உபாகமம் 17:5, 22:24).
ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்டார். (அப்போஸ்தலர் 7:59) பவுல் கல்லெறியப்பட்டார். (அப்போஸ்தலர் 14:19, 2 கொரிந்தியர் 11:25)
கிறிஸ்துவையே கல்லெறிய, கற்களை எடுத்துக்கொண்டவர்கள் உண்டு (யோவான் 8:59, 10:31).
விபச்சாரத்தில் கையும் மெய்யுமாய் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை பரிசேயரும் சதுசேயரும் இயேசுவிடத்தில் கொண்டு வந்தார்கள்.
"இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே , நீர் என்ன சொல்லுகிறீர்கள்? '' என்று கேட்டார்கள் ( யோவான் 8 : 5) .
"பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக்கடவன்". என்று இயேசு அனுமதி கொடுத்தார். ஆனால் பாவம் செய்யாதவர்கள் யாருமில்லை. எனவே யாராலும் கல்லெடுத்து, எறிய முடியவில்லை. (யோவான் 8 : 7-9).
தேவபிள்ளைகளே, கல்லெறிதலைவிட கொடூரமானது, சொல் எறிதல் வாயின் வார்த்தைகளை யோசனையில்லாமல் அள்ளி வீசி, உள்ளங்களை நீங்கள் காயப்படுத்துகிறீர்களா? யோசித்துப் பாருங்கள்.
"சோறு விழுந்தால் எடுத்து விடலாம். சொல் விழுந்தால் எடுக்க முடியாது" என்பது பழமொழி. அன்பின் வார்த்தைகளை, ஆறுதலின் வார்த்தைகளை, குடும்பம் கட்டப்படும் வார்த்தைகளையே உபயோகிப்பீர்களாக"
தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன், தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்" (நீதிமொழிகள் 21:23)