தவறாக அனுப்பப்பட்ட ‘இமெயில்’ - தற்கொலை செய்துகொண்ட மாணவி

Nila
4 years ago
தவறாக அனுப்பப்பட்ட ‘இமெயில்’ -  தற்கொலை செய்துகொண்ட மாணவி

இங்கிலாந்து நாட்டின் கார்டிப் பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு மருத்துவக்கல்வி பயின்று வந்த மாணவி மாரெட் ப்லூகஸ் (21). இவர் 3-ம் ஆண்டு செல்வதற்கான தேர்வை எழுதியுள்ளார். அதில், 39 சதவிகிதம் எடுத்து தோல்வியடைந்துள்ளார். அதனை தொடர்ந்து மறுதேர்வு எழுதியுள்ளார்.

அந்த தேர்வுக்கான முடிவு இமெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாரெட் ப்லூகஸ் மறுதேர்விலும் தோல்வியடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மறுதேர்வில் மாரெட் 62 சதவிகிதம் எடுத்து தேர்ச்சியடைந்துள்ளார்.

ஆனால், பல்கலைக்கழகத்தால் இமெயில் மூலம் அனுப்பப்பட்ட தேர்வு முடிவு தவறானது என்பதை அறியாத மாணவி மாரெட் ப்லூகஸ் மிகுந்த கவலையில் இருந்துள்ளார். மன உளைச்சல் அதிகரித்த நிலையில், பிரிட்டானியா மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து மாணவி மாரெட் ப்லூகஸ் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4