இன்றைய வேத வசனம் 30.10.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
பட்டாசு வெடிக்க தேவையான முக்கிய வெடிபொருள் கண் பவுடர். இது கண்டு பிடிக்கப்பட்டதே 1799 -ல் தான். அதன்பிறகே தற்போதைய பட்டாசு வந்தது.
அதற்கு முன்னர், 10 ம் நூற்றாண்டில், வேறு வகையான மர எரிபொருளை மூங்கில் உள்ளே அடைத்து அதை வெடிக்க வைத்து ‘பட்டாசு’ கண்டு பிடித்தனர் சீனர்கள்..!
நோக்கம்: வெடி சப்தம், பேய் பிசாசுகளை துரத்தும் என்ற சீனர்களின் மூட நம்பிக்கை..!
அதில் வெடிக்கும் போது, சிலருக்கு ஏற்பட்ட குதூகலம் பின்னாளில் சீன புது வருட பண்டிகையில் மகிழ்ச்சிக்காக பட்டாசு வெடிக்கவும் ஆரம்பித்தனர்.
அப்படியே, புது வருடம் பட்டாசு வெடிக்கும் சீனர்களின் மூடக்கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுக்க தொற்றியது.
பட்டாசுகளை வெடிப்பதனால் மனிதனுக்கு ஏற்படும் தீமைகள் அதிகம். எனவே, பொதுநலன் கருதி பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறுவதாவது.
பட்டாசு வெடிப்பதனால் இயற்க்கைக்கும், மனிதனுக்கும் பல வழிகளிலும் தீமைகள் ஏற்படுகின்றன. அத்தீமைகள் பெரிய அளவில் ஒரு தேசத்தையே பாதிக்கின்றது.
மலைகள், காடுகள் மற்றும் புல்வெளிகள் உள்ளிட்ட இயற்கை சுற்றுச்சூழல்கள், வெடிபொருட்கள் மூலம் வெளியேறும் கரும்புகையால் மாசுபடுவதுடன் வெப்பமும் அதிகரித்து விடுகின்றது.
சாலைகளில் பட்டாசுகளை வெடிப்பதால், வாகன ஒட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறான இன்னல்கள் ஏற்படுகின்றன.
பட்டாசு வெடிப்பதால் காயம் அடைவோரில் 50 சதவீதம் பேர் குழந்தைகளே. ஆகையால் நாம் பட்டாசு வெடிப்பதை உடனே கைவிட வேண்டும்.
இயற்கையை சிதைக்காமல் அழிக்காமல் நாம் சுபகாரியங்களை கொண்டாட பல வழிகள் உலகில் உள்ளன.
பட்டாசில் இருந்து எழும் சத்தத்தால் காது செவிடாவதைப் போல அதில் இருந்து வெளியாகும் புகையால் கண், தொண்டை, மூக்கு போன்றவற்றில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.
பட்டாசு புகையின் தாக்கம் உடனே தெரியாது. 4,5 நாள் கழித்துதான் அந்த தாக்கத்தை நாம் உணர முடியும்.
உலக நாடுகள் அனைத்திற்குமே சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது ஒரு சவாலான பணியாக இருந்தாலும் வெளிநாடுகள் இதை வெற்றிகரமாக சமாளித்து விடுகின்றன.
இந்தியாவால் இதை சமாளிக்க முடியும் என்றாலும் ஒரு போதும் முயற்சிப்பதில்லை.
இந்தியாவில் 10-ல் ஒருவருக்கு காது கேளாமை கோளாறு உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகளை வெடிக்கும்போது காது கேளாமை கோளாறு மேலும் அதிகமாகும்.
காது செவிடான பிறகு மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாது. இதற்கு தனியாக சிகிச்சை என்று எதுவும் கிடையாது.
காது கேட்கும் மிஷின் பொருத்தினாலும் துல்லியமாக கேட்காது.
பட்டாசில் இருந்து எழும் சத்தத்தால் காது செவிடாவதைப் போல அதில் இருந்து வெளியாகும் புகையால் கண், தொண்டை, மூக்கு போன்றவற்றில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.
முதலில் இவை தலைவலியை கடுமையாக உண்டாக்கும் மூளையின் செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதயநோயாளிகள், நுரையீரல் கோளாறு உள்ளவர்கள் இப்புகையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் உள்ள வேதியியல் பொருள்கள் விளைவிக்கும் பல்வேறான தீங்குகள்:
சளி, இருமல், தும்மல், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நுரையீரல் கேன்சர், சரும வியாதி, கண் நோய், தைராய்டு கோளாறு..
என்று இதனைச் சுவாசிக்கின்ற மனித இனத்திற்கு இது பெரும் உடல் நலக்கேட்டை ஏற்படுத்துகிறது.
பச்சிளம் குழந்தை மற்றும் கருவில் உள்ள குழந்தையை கூட பாதிக்கிறது. முக்கியமாக ஆஸ்துமாக்காரர்களுக்கு பட்டாசு வெடிப்பது நிச்சயமாக மகிழ்ச்சிக்குரியதாக இருக்காது.
தாமிரம் சுவாசக்குழாய் எரிச்சல்
கேட்மியம் இரத்த சோகை மற்றும் சிறுநீரக பாதிப்பு
ஈயம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்
மெக்னிஷியம் தூசி மற்றும் புகைகள் உலோக FUME காய்ச்சலை ஏற்படுத்தும்
சோடியம் தோல்வியாதி
துத்தநாகம் வாந்தி ஏற்படும்
நைட்ரேட் மன அமைதி பாதிக்கப்படும்
நைட்ரைட் புத்தி பேதலித்து கோமா ஏற்படும்.
பட்டாசு குப்பைக்கழிவுகளை அப்புறப்படுத்தும் நகராட்சி/ஊராட்சி துப்புரவாளர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
அனைத்தும் நச்சுக்குப்பைகள் என்று அறியாமல் எவ்வித பாதுகாப்பும் இன்றி இராசாயன நச்சு நெடி தாங்காமல் இருமிக்கொண்டே… அவ்வேலையை செவ்வனே செய்து முடிக்கும் அவர்களைக்கண்ட பிறகாவது பட்டாசு கொளுத்துவது பற்றி சிந்தித்துப்பாருங்கள்.
சில சமயம் பட்டாசு வெடித்த பின்பு மழை பெய்தால் கேட்கவே வேண்டாம். காற்றை மட்டுமே மாசுபடுத்திய பட்டாசு, அடுத்து நீர் நிலையை மாசு படுத்துகிறது.
பட்டாசு வெடித்த பின்னர் மிகுந்து கிடக்கும் அத்தனை இரசாயன கழிவும் மழை நீரினால் அடித்துச் செல்லப்பட்டு குளம், ஆறு இவற்றில் கலக்க… நீர் வாழ்வன, அவற்றை உண்டு வாழும் நில வாழ்வன, பறப்பன என அனைத்தையும் பாதிக்கிறது பட்டாசு..!
பின்னர் இந்த இராசாயன நீர் நிலத்தடியில் உறிஞ்சப்படுவதால் அதனை அருந்தி வாழும் மனிதர்கள், என்னதான் காய்ச்சி வடிகட்டி குடித்தாலும் நோய்க்குள்ளாகிறார்கள்.
நிலத்தில் வாழும் மண்புழுக்கள், தாவரங்கள் என்று அனைத்தும் நோயினால் பாதிக்கப்படுகின்றன. தாவரங்கள் பூப்பதும், காய்ப்பதும், வளர்வதும் தடை படுகிறது. விவசாயம் பேரிழப்பு அடைகிறது. நீர் மாசு படுகிறது.
இதையும்தாண்டி பட்டாசு வெடித்து அப்போது ஏற்படும் விபத்துக்கள்… அப்பப்பா… சொல்லி மாளாது.
கண்ணிழந்தோர், கையிழந்தோர், காலிழந்தோர், மேனி எரிந்தோர், முகம் விகாரமானோர், தீப்பற்றி எறிந்த வீடுகள், பட்டாசுக்கடைகள், மனித உயிரிழப்புகள், பொருளாதார நாசம்… என வருடா வருடம் இவையெல்லாம் எத்தனை எத்தனை..?
இன்னுமா நாம் பட்டாசு வெடிக்க வேண்டும்..? இன்னுமா நாம் பட்டாசு விற்க வேண்டும்..? இன்னுமா நாம் பட்டாசு தயாரிக்க வேண்டும்..?
பாத்தீர்களா! பட்டாசு வெடிப்பதால் நாம் எவ்வளவு பெரிய பாவங்களை செய்கிறோம்…? நம்மை நாமே அழித்துக்கொள்வதுடன், நாம் சமுதாயத்தில் உள்ள மற்ற மக்களையும் அல்லவா சேர்த்து அழிக்கிறோம்..?
மென்மையான தற்கொலையும் மென்மையான கொலையும் போலல்லவா இது உள்ளது..? இப்பேர்பட்ட பாவத்தை செய்ய வைக்கும் இந்த பட்டாசு நமக்கு அவசியமா?
மேற்கண்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு பட்டாசுகள் வெடிப்பதை தவிர்ப்போம்.
பட்டாசு வெடிக்காமல் சுப காரியங்களை கொண்டாட பல வழிகள் உலகில் நம்மிடம் இருக்கையில், நமக்கு வரப்பிரசாதமாக தேவன் கொடுத்த இயற்கையை கெடுத்துத்தான் சுப காரியங்களை கொண்டாட வேண்டுமா ?
தனி நபரின் மகிழ்ச்சிக்காக பிறரின் உடல் நலத்தையும், உயிரையும் பாதிப்பதை அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றங்களும் கருத்து கூறுகின்றது.
கிறிஸ்தவர்களாகிய நாம் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். என்று வேதம் நம்மை அறிவுறுத்துகிறது (I கொரிந்தியர் 10:31)
நாம் பட்டாசு வெடித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் போது தேவனுடைய நாமம் மகிமைப்படுமா? என்பதை சிந்திப்போம்!
கிறிஸ்தவர்களாகிய நீங்கள் கிறிஸ்துமஸ், ஈஸ்டர், வருட பிறப்பு மற்றும் சுப காரியங்களில் பட்டாசு வெடிக்காமல், அந்த பணத்தைக்கொண்டு திக்கற்றவர்களுக்கு உதவி செய்தால் உங்கள் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
இயற்கையை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட நாம். சுற்றுச்சூழல் மாசுக்கு எதிராக குரல் கொடுப்போம்.
ஆமென்!!