கிளிநொச்சியில் பாதசாரி கடவையில் முதியவரை மோதித்தள்ளிய டிப்பர் வாகனம்

#Accident #Kilinochchi
Prathees
4 years ago
கிளிநொச்சியில் பாதசாரி கடவையில் முதியவரை மோதித்தள்ளிய டிப்பர் வாகனம்

கிளிநொச்சி - ஏ9 வீதியில்   தனியார் வங்கி முன்பாக உள்ள பாதசாரி கடவையில் இன்று (30) இடம்பெற்ற விபத்தில்  முதியவர் ஒருவர்  படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்தில் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியை சேர்ந்த 75 வயதான முதியவர்  படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டார்.

குறித்த முதியவர் ஏ9 வீதியை கடக்க முற்பட்டபோது டிப்பர் வாகனம் அவரை மோதியுள்ளது.

விபத்தில் முதியவரின் கால் துண்டாகியதுடன், தலைப்பகுதியிலும் பாரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4