தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 31 பேர் சிக்கினர்!

Prabha Praneetha
4 years ago
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 31 பேர் சிக்கினர்!

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே நேற்று மேல் மாகாணத்துக்கு உள்நுழைய முற்பட்ட 1,172 வாகனங்களில் வந்த 642 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முற்பட்ட 1,344 வாகனங்களில் வந்த 747 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிப் பயணிக்க முயன்ற 123 வாகனங்கள் 202 பேருடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4