எதற்காக பொலிஸாரை பெண்கள் தாக்கினர்...?

#Police #Arrest
Prathees
4 years ago
எதற்காக பொலிஸாரை பெண்கள் தாக்கினர்...?

மொரட்டுவை, மாதங்கஹவத்த பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 10 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தீர்த்து வைப்பதற்காக குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் மாதங்கஹவத்த பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு ஒரு கும்பல் காவல்துறை அதிகாரிகளை தாக்கியதில், தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மற்றைய பொலிஸ் உத்தியோகத்தரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வந்த விசாரணைகளுக்கு அமைய 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4