அமைச்சு பதவியில் இருக்க முடியாது என நீதியமைச்சர் எதற்காக தெரிவித்தார்?

#Ali Sabri #Gnanasara Thero
Prathees
2 years ago
அமைச்சு பதவியில் இருக்க முடியாது என நீதியமைச்சர் எதற்காக தெரிவித்தார்?

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருத்தை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பதவிக்கு கலகொடஅத்தே ஞானசார தேரரின் நியமனம் தொடர்பில்  நீதி அமைச்சர் அலி சப்ரி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நியமனம் அனைத்து இன மக்களினதும் நியாயமான செயற்பாட்டிற்கு தடையாக உள்ளது என அமைச்சரின் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் மதத் தலைவர்கள் மௌலவிகள் அமைச்சரிடம் தெரிவித்த  கடும் எதிர்ப்புக்குப் பிறகு தனது எதிர்ப்பை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்த செயலணி தொடர்ந்தும் செயற்பட்டால் இனி நீதி அமைச்சராக பதவி வகிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளைஇ கடந்த வியாழன் அன்று நடைபெற்ற கட்சித் தலைமைக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் பலர் இந்த நியமனத்திற்கு தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!