அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு

#weather
Prathees
4 years ago
அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டில் நிலவும் மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன.

நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு அருகில் உள்ள தாழ் அமுக்கம்இ தற்போது கிழக்கு கடற்பரப்பை அண்மித்த பகுதியில் நிலைக்கொண்டுள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல்வரை கடற்றொழில் மற்றும் கடல் பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4