தடுப்பூசிக்கு கட்டுப்படாத A30 கொவிட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதா? - இராஜாங்க அமைச்சர் விளக்கம்

Prasu
4 years ago
தடுப்பூசிக்கு கட்டுப்படாத A30 கொவிட்  வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதா? - இராஜாங்க அமைச்சர் விளக்கம்

உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தும் A30 என்ற புதிய வகை கொவிட் வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த A30 வைரஸ் புறழ்வு தொடர்பில் இலங்கை மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.

இந்த வைரஸ் புறழ்வானது, தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாது என கண்டறியப்பட்டுள்ளது.

பைசர், அஸ்ட்ராசேனிகா உள்ளிட்ட அனைத்து வகை தடுப்பூசிகளுக்கும் இந்த வைரஸ் புறழ்வு கட்டுப்படாது என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த வைரஸ், பரவும் பட்சத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மக்கள் பொறுப்பின்றி நடந்துக்கொண்டால், எதிர்வரும் 4 வாரங்களில் அபாயகரமான பெறுபேறுகளை சந்திக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன குறிப்பிடுகின்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4