இலங்கையில் மேலும் 565 பேருக்கு கொரோனா

Prabha Praneetha
4 years ago
இலங்கையில் மேலும் 565 பேருக்கு கொரோனா

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 565 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 39 ஆயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 5 இலட்சத்து 12 ஆயிரத்து 480 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 13 ஆயிரத்து 229 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 07 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 11 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

30 – 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 05 ஆண்களும் 02 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டோரில் 07 ஆண்களும் 05 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 725 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4