எதற்காக காரில் சென்ற தந்தையை வழிமறித்து மகள்கள் தாக்கினர்?

#Attack
Prasu
4 years ago
எதற்காக காரில் சென்ற தந்தையை வழிமறித்து மகள்கள் தாக்கினர்?

ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு சிறுமிகள் நடுரோட்டில் தங்களது தந்தையை தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனுமன் நகரின் அருகே இரண்டு சிறுமிகள் ஒரு காரை வழிமறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்று விட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் அந்த காரை நிறுத்தி உள்ளனர். அந்த சிறுமிகள் காரில் இருந்த ஆண், பெண் இருவரையும் பிடித்து வெளியில் இழுத்து பயங்கரமாக தாக்கியுள்ளனர்.அவரை தாக்கும் பொழுது அந்தப் பெண்கள் இரண்டு மகள்கள் இருக்கும்போது வேறு ஒரு பெண்ணுடன் காதல் கொண்டுள்ளாயே உனக்கு வெட்கமாக இல்லையா என்று கூறிக்கொண்டே அடித்தனர்.

இதைக் கேட்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரில் வந்தவர்கள் தங்களது தந்தை என்றும். மற்றொரு பெண் தங்கள் தந்தையின் காதலி என்றும் கூறியுள்ளனர். அவர்களால் தான் தங்கள் குடும்பத்தின் அமைதி நிலை குலைந்து விட்டதாகவும், எங்களின் தாய் கஷ்டத்தை அனுபவித்து வருவதாகவும் அவர்கள் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4