கொடிகாமம் விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு! - இளைஞர் படுகாயம்

#Accident
Prasu
4 years ago
கொடிகாமம் விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு! - இளைஞர் படுகாயம்

யாழ்., கொடிகாமம் - கச்சாய் வீதியில் இன்றிரவு (31) இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அப்பகுதியைச் சேர்ந்த செல்லையா சற்குணநாதன் (வயது 78) எனும் வயோதிபரே உயிரிழந்துள்ளார்.
 
கொடிகாமம் - கச்சாய் வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர், சைக்கிளில் பயணித்த குறித்த வயோதிபரை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
 
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிருஷ்ணகுமார் சுகிந்தன் (வயது 27) எனும் இளைஞரையும், வயோதிபரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.
 
வைத்தியசாலையில் சிகிச்சை பயனின்றி வயோதிபர் உயிரிழந்த நிலையில், இளைஞர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
 
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4