இன்றைய வேத வசனம் 02.11.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
நீங்கள் ஒரு பட்டாம் பூச்சியை பார்த்தீர்களென்று சொன்னால் அது ஒரு புழுவாக தான் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பிக்கிறது.
அந்த கூட்டுப்புழு நன்றாக சாப்பிட்டு சந்தோஷமாக சுற்றித்திரியும் தீடீரென்று அது கூட்டிற்குள் சென்று மிகவும் கஷ்டப்பட்டு துடிதுடித்து கொண்டிருக்கும்.
அதை பார்க்கின்றன நீங்கள் நான் அதை காப்பாற்ற விரும்புகிறேன் என்று சொல்லி அதே வெளியே கொண்டு வருவீர்கள் என்று சொன்னால், அது முழு உருவமற்ற வளர்ச்சியற்ற இறக்கைகள் இல்லாத ஒரு முடமான பட்டாம் பூச்சியைத்தான் பார்க்கமுடியும்.
அதுமட்டுமல்ல, அது சீக்கிரத்தில் செத்துப்போய்விடும். ஆகவே கூட்டுப்புழு பருவத்தில் இருக்கும் போது எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று விட்டுவிடும்போது அது தனக்குரிய நேரத்திலே தானக கூட்டை விட்டு அழகான அருமையான தொரு வண்ணத்துப்பூச்சியாய் வெளிவரும்.
அதுதான் நம்முடைய வாழ்விலும் நடக்கிறது.
நாம் கடந்து செல்லும் பாடுகள், கஷ்டங்கள் எல்லாம் கூட்டுப்புழு பருவத்தை போன்றது அந்நாட்களில் நாம் கர்த்தருடைய பலத்த கரத்திற்க்குள் அடங்கியிருக்க வேண்டும் என்றே தேவன் அவற்றை அனுமதித்திருக்கிறார்.
நாம் அதற்க்குள் மரித்து போவது நம் ஆண்டவருடைய நோக்கமல்ல. மாறாக நாம் பரிபூரண பலத்தைப் பெற்றுக் கொண்டு வெற்றி பெற்றவர்களாய் அழகானதொரு வண்ணத்துபூச்சியைப் போல சிறகடித்து பறக்க வேண்டுமென்பதே தேவனுடைய நோக்கமும் சித்தமுமாயிருக்கிறது.
ஏசாயா 48:10
இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.
ஆமென்