நாடளாவிய ரீதியில் பொருட்களுக்கு தட்டுப்பாடு! பாரிய திண்டாட்டத்தில் மக்கள்

Reha
2 years ago
நாடளாவிய ரீதியில் பொருட்களுக்கு தட்டுப்பாடு! பாரிய திண்டாட்டத்தில் மக்கள்

நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். அந்த வகையில் நாடளாவிய ரீதியில் கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.

1000 ரூபாய்க்கும் மேல் விலை அதிகரிக்கப்பட்டிருந்த போதும், சந்தைகளில் சமையல் எரிவாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலை அதிகரிப்பைத் தொடர்ந்து ஏராளமான மக்கள் விறகு அடுப்பிற்கும், மண்ணெண்ணெய் அடுப்பிற்கும் மாறியுள்ளனர்.

இதனால் அண்மைக்காலமாக மண்ணெண்ணெய்க்கும், விறகு அடுப்பு மற்றும் மண்ணெண்ணெய் அடுப்பிற்கும் கேள்வி எழுந்துள்ளது. மக்கள் இவ்வாறான கஷ்டத்தில் இருக்கும் போது மற்றொரு பேரிடியான செய்தியும் வந்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் 72 மணித்தியாலம் மின்துண்டிக்கப்படும் என்ற தகவல் வெளிவருகின்ற நிலையில், மக்கள் மண்ணெண்ணெய் வாங்கி வீடுகளில் சேமித்து வைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சந்தைகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மண்ணெண்ணெய்க்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்படுகின்றது.

மண்ணெண்ணெய்க்கும், சமையல் எரிவாயுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!