இனிவரும் காலம் மிகவும் முக்கியமான காலம்:சரவணபவன்

Prabha Praneetha
2 years ago
இனிவரும் காலம் மிகவும் முக்கியமான காலம்:சரவணபவன்

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 20 பேரில் 10 பேர் 16 வயதுக்கு குறைந்த பாடசாலை மாணவர்கள் என்பதையும், பண்டிகை காலத்தில் சுகாதார நிலையை உணர்ந்து ஒத்துழைத்து செயற்படுங்கள் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற கொவிட் பரவல் மற்றும் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்னணி பணியாளர்களிற்கான மூன்றாம் கட்டமாக பைசர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் முதல் தடுப்பூசியாக சைனாபோம் தடுப்பூசியை பெற்றுள்ளார்கள். இரண்டாவது தடுப்பூசியை 70 வீதமானவர்கள் பெற்றுள்ளார்கள்.

அதேவேளை 20 வயது தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் 34 வீதமானவர்கள் மாத்திரமே தடுப்பூசியை பெற்றுள்ளார்கள். எனவே எதிர்வரும் நாட்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கான பைசர் தடுப்பூசி வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களிற்கான 3ம் கட்ட தடுப்பூசிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும்.

ஆகவே, 20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தடுப்பூசி போடுவதில் பின்னடிக்காமல் தற்பொழுது வழங்கப்படும் சைனாபோம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும்.

அவர்களிற்கும் எதிர்காலத்தில் 6மாதம் முடியும் காலத்தில் பைசர் தடுப்பூசி மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்க சந்தர்ப்பம் உள்ளது.

ஆகவே, பைசர்தான் வேண்டும் என்று இருக்காமல் முதல் இந்த ஊசியை பெற்று பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொண்டு 6 மாத நிறைவில் பைசர் வழங்கப்படும். அதேவேளை தற்பொழுது நோய் நிலை குறைந்துள்ள நிலையில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

அதேநேரம் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அதனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!