16 வயது சிறுவன் செலுத்திய சொகுசு கார்! வெலிசறை மயானத்திற்கு அருகில் பயங்கர விபத்து
வெலிசறை மயானத்திற்கு அருகில் இன்று (04) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசறை மயானத்திற்கு அருகில் இன்று காலை 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு கார் ஒன்று வீதியை விட்டு விலகி எதிர்திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டி மற்றும் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
சொகுசு கார் சாரதி 16 வயதுடைய இளைஞர் என மஹாபாகே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதுடன், பின்னால் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.