கோவிட் நிலைமை குறித்து இராணுவ தளபதியின் எச்சரிக்கை

#Covid 19 #Shavendra Silva
Prathees
2 years ago
கோவிட் நிலைமை குறித்து இராணுவ தளபதியின் எச்சரிக்கை

பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதை தொடர்ந்து சிலர் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்படுவதை அவதானிக்க கூடியதாக இருப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை தொடர்ந்தால் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத் தளபதி மேலும் தெரிவித்ததாவது,

“பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால்,  சாதாரண மக்கள் பயன்படுத்தும் முறைகளால் எதிர்காலத்தில் மேலும் நோயாளிகள் பதிவாகும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது.

தற்போது ஒரு நாளைக்கு சுமார் 10-25 பேர் கோவிட் நோயால் உயிரிழக்கின்றனர்.

மேலும் நாட்டில் ஒவ்வொரு நாளும் 500 முதல் 600 வரையான கோவிட் தொடர்பான நோயாளிகள் பதிவாகின்றனர்.

மேல் மாகாணத்தில் குறிப்பாக கம்பஹா மற்றும் கொழும்பு போன்ற மாவட்டங்களில்  50 க்கும் மேற்பட்ட கோவிட் நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

நாங்கள் மேல் மாகாணத்திற்கு வெளியேயும் கோவிட் தொற்றுகளை எதிர்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டில் இருந்து வௌியேறும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முகக்கவத்தை அணிந்து செல்லுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!