உர செயலகத்தை சேர்ந்த மேலும் நான்கு பேர் விரைவில் கைது?

#Arrest
Prathees
2 years ago
உர செயலகத்தை சேர்ந்த மேலும் நான்கு பேர் விரைவில் கைது?

தேசிய உர செயலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் 1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி முறைகேடு தொடர்பில் மேலும் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதிப் புலனாய்வுப் பிரிவினரால் அதன் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் யூரியா உள்ளிட்ட மூன்று வகையான உரங்கள் இறக்குமதியின் போது போலியான இரசாயன அறிக்கைகள் மற்றும் மோசடி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதிப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!