பண்டோரா ஆவணங்களில் மற்றுமொரு இலங்கைத் தமிழர்!

Reha
2 years ago
பண்டோரா ஆவணங்களில் மற்றுமொரு இலங்கைத் தமிழர்!

வெளியிடப்படாத சொத்துக்களைப் பெற்ற பல நபர்களின் விபரங்களை வெளிப்படுத்திய பண்டோரா ஆவணங்களில் மற்றுமொரு இலங்கைத் தமிழர் பற்றிய விபரங்கள் கசிந்துள்ளன. இலங்கையில் பதவியிலிருந்த இரண்டு ஜனாதிபதிகள் மற்றும் ஒரு பிரதமரின் ஆலோசகராக இருந்த இராமலிங்கம் பாஸ்கரலிங்கம் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் (BVI) பதிவுசெய்யப்பட்ட ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமான சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நிறுவனம் மூலம் நிறுவனத்திற்கு இராமலிங்கம் பாஸ்கரலிங்கம், ஹொரைசன் கொலிஜ் ஒஃப் பிசினஸ் அண்ட் டெக்னோலஜி (HCBT) நிறுவனத்தின் மூலம் நிதியளித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம், ஜனவரி 2008 இல் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. இதுதவிர, தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து, இங்கிலாந்தில் சொத்து வாங்கியுள்ளார். சர்வதேச ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு (ICIJ) தலைமையிலான பண்டோரா ஆவணங்கள் மூலம் இது முதல் முறையாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதன்படி, பண்டோரா ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் மூன்றாவது இலங்கையர் இவர். முன்னதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிரூபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருகுமார் நடேசன் ஆகியோரின் பெயர்களும் பண்டோரா ஆவணங்களில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!