இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிக்கின்றது?

#SriLanka #Covid 19 #Death
Prasu
2 years ago
இலங்கையில்  கொரோனா  மரணங்கள்  அதிகரிக்கின்றது?

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (04) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,821 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 2 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 13 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

30 - 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 1 ஆணும் 1 பெண்களும் அடங்குவதாகவும் 60 வயதுக்கு மேற்பட்மோரில் 05 ஆண்களும் 08 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் மேலும் 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 543,867 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 339 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 514,573 ஆக அதிகரித்துள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!