இன்றைய வேத வசனம் 06.11.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
ஆவிக்குரிய ஓட்டத்தில் முன்னோக்கி ஓடுவதற்கு உங்களுக்கு தடை செய்கின்ற எல்லா தடைகளையும் வெளியே தூக்கி எறியுங்கள்.
அது உங்களுக்குள் இருக்கிற பெருமையாக, அதிகாரமாக, தகுதியாக, புகழாக, அந்தஸ்தாக, செல்வமாக அல்லது செல்வாக்காக இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் நீங்கள் முன்னோக்கி போவதற்கு தடையாக இருந்தால் அதை உடனடியாக தூக்கி வீச வேண்டும்.
ஒரு வாலிபன் இயேசுவினிடத்தில் வந்து ஆண்டவரே நான் பரலோகத்திற்கு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.
அப்பொழுது இயேசு உன்னிடத்தில் இருக்கிற சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்து விட்டு என்னோடு பரலோகத்திற்கு வா என்றார்.
அந்த வாலிபனுக்கு பரலோகத்தில் மகிமையான வாழ்வை குறித்த எண்ணம் சிறிதேனும் இல்லை. அந்த எண்ணம் அவனுக்கு இருந்திருந்தால் இந்த உலகத்தில் இருக்கின்ற எதுவும் அதற்கு நிகரல்ல என்று நினைத்திருப்பான்.
அவனுக்கு அப்பொழுது சொத்து மேன்மையானதாக, தெரிந்தது பரலோகத்தை இழந்தான்.
அவனைப்போல பரிதாபத்திற்குரியவன் யாருமில்லை. இயேசு கிறிஸ்துவின் இடத்தில் வந்து துக்கத்தோடு, கஷ்டத்தோடு திரும்பி சென்றவன் அவன் ஒருவன் மாத்திரமே. (#மத்தேயு 19:16-22)
நண்பர்களே நமக்கு தடையாக இருக்கிற காரியங்கள் எதுவாக இருந்தாலும் அதை நாம் முதலாவது தூக்கியெறிய வேண்டும்.
ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறவன் முதுகில் ஏதாவது சுமையை வைத்துக்கொண்டு ஓட மாட்டான். ஓட்டப்பந்தயத்திற்குரிய உடையை அணிந்து கொண்டுதான் ஓடுவான்.
அது போலவே, இயேசுவை நோக்கி முன்னால் ஓட வேண்டுமென்றால் உங்களுக்குள் இருக்கிற உலகத்தின் அழுத்தங்களை பின்னால் எறிந்து விட வேண்டும்.
அதைவிடுத்து, உலகத்தின் ஆசை இச்சைகளை விரும்புவீர்கள் என்றால் உங்கள் தகுதியை இழந்து விடுவீர்கள். அப்படி தகுதி இழந்து விட்டீர்கள் என்றால் நரகத்திற்கு தான் போக வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.
விடாமுயற்சியோடு, பொறுமையோடு நாம் ஓட வேண்டும். அப்பொழுது தேவ சித்தத்தை நம் வாழ்க்கையில் நிறைவேற்றுவோம்.
ஆண்டவரும் நமக்கு அதற்கான வழியை திறந்துக்கொடுத்து நம்மை நடத்துவார்.
அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். (பிலிப்பியர் 3:11)
ஆமென்!