அருட்தந்தை சிறில் காமினி சீஐடியில் வாக்குமூலம் வழங்கச் செல்லாமைக்கு என்ன காரணம்?

#Investigation #Colombo
Prathees
2 years ago
அருட்தந்தை சிறில் காமினி  சீஐடியில் வாக்குமூலம் வழங்கச் செல்லாமைக்கு என்ன காரணம்?

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வாக்குமூலம் வழங்குவதற்காகஇ அருட்தந்தை சிறில் காமினி ஆஜராகவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நேற்று (05) நீதிமன்றத்திற்கு மோஷன் மூலம் அறிவித்துள்ளனர்

அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சலே அளித்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இரண்டு தடவைகள் ஆஜராகுமாறு கூறப்பட்ட போதிலும்இ அருட்தந்தை சிறில் காமினி இதுவரை ஆஜராகவில்லை.

இலங்கை குற்றவியல் சட்டத்தின் 164 மற்றும் 174 ஆகிய பிரிவுகளின் கீழ் அரச உத்தியோகத்தர் ஒருவரின் கடமைகளுக்கு கீழ்ப்படியாமல் தந்தை குற்றம் செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

அரச ஊழியர் ஒருவரின் உத்தரவை மீறிய தந்தைக்கு எதிராக முறையான முறைப்பாடு செய்யுமாறு புலனாய்வு அதிகாரிகளுக்கு நீதவான் அறிவுறுத்தியதுடன்ஈ அதன் பின்னர்  உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதவான் தெரிவித்தார்.

கடந்த மாதம் 25ம் தேதி “ணுழழஅ” தொழில்நுட்பம் மூலம் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான கலந்துரையாடலின் போது அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்த கருத்துக்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சேலினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!