5வது முறையாக அஜித்துடன் இணையும் சிவா
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள அண்ணாத்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
வெளியான இரண்டே நாளில் நூறு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அண்ணாத்த படம் சாதனை படைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் சிவா அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி நடிகர் சூர்யாவிற்காக ஒரு கதை தயார் செய்துள்ளதாக கூறியுள்ள சிவா விரைவில் சூர்யா படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் சூர்யா வாடிவாசல் படத்தை முடித்த பின்னரே சிவா படத்தில் இணைவேன் என கூறி விட்டாராம்.
இதற்கிடையே அஜித்தை வைத்து படம் ஒன்றை இயக்க சிவா திட்டமிட்டுள்ளார். சிவா இயக்கத்தில் ஏற்கனவே அஜித் வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என தொடர்ந்து நான்கு படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஐந்தாவதாக இவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படத்திற்கு வரம் என தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படத்தில் தொடர்ந்த ‘வி’ செண்டிமெண்ட் இந்த படத்திலும் தொடர்கிறது போல. வி என்ற எழுத்தில் தலைப்பு வைத்தால் படம் வெற்றி பெறும் என சிவா நினைக்கிறாரோ என்னவோ.
ஏற்கனவே நான்கு படங்கள் நடித்துள்ள நிலையில் மீண்டும் ஐந்தாவதாக அதே இயக்குனருடன் அஜித் இணைவது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து ஒரே இயக்குனர் என்றால் போர் அடித்து விடும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.