கனவுப் படத்தை இயக்க தயாராகும் விஷால்!

#TamilCinema #Actor
கனவுப் படத்தை இயக்க தயாராகும் விஷால்!

மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்த விஷால், அதன் இரண்டாம் பாகத்தையும் அவரது இயக்கத்திலேயே தயாரித்து நடித்தார். ஆனால் லண்டனில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பிலேயே அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு துப்பறிவாளன்-2 கிடப்பில் கிடக்கிறது. இந்த நிலைவில் வரும் ஜனவரியில் அப்படத்தை தானே இயக்கி நடிக்கப்போவதாக அறிவித்துள்ளார் விஷால்.

மேலும், ஆர்யாவுடன் தான் இணைந்து நடித்த எனிமி படத்தை தீபாவளிக்கு வெளியிட்டுள்ள விஷால், இதையடுத்து வீரமே வாகை சூடும், லத்தி போன்ற படங்களில் நடித்து வருபவர், இதன்பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

அதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு ஆகஸ்டில் தனது கனவு படத்தை இயக்கப் போகிறாராம் விஷால். அந்த படம் இதுவரை வெளியான தனது படங்களை விடவும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகப்போகிறது என்கிற தகவலையும் வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!