‘இந்தியன் 2’ படத்தில் இருந்து வெளியேறும் காஜல் அகர்வால்?

Prabha Praneetha
3 years ago
‘இந்தியன் 2’ படத்தில் இருந்து வெளியேறும் காஜல் அகர்வால்?

ஓராண்டுக்கு மேலாக முடங்கி இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்க படக்குழு தயாராகி வருகின்றனர்.

ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, அதன்பின் இயக்குனர் ஷங்கர் - தயாரிப்பாளர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஓராண்டுக்கு மேலாக முடங்கி உள்ளது.

தற்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதால், மீண்டும் படப்பிடிப்பை தொடங்க படக்குழு தயாராகி வருகின்றனர்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதால், அவரால் மேற்கொண்டு படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகி உள்ளது, இதன்காரணமாக அவருக்கு பதிலாக வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!